#Breaking: தூத்துக்குடி, சாத்தான்குளம் நினைவிருக்கா? - கேள்வி கேட்டதும் வெளியே வந்த அதிமுக..!



TN Assembly Session 2025 MK Stalin Raise Question to AIADMK

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த கேள்விநேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் & அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,"தமிழ்நாட்டில் ஒரேநாளில் 4 கொலைகள் நடைபெற்றுள்ளது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதுதான் திமுக அரசு ஆட்சி நடத்தும் நிலையா?" என கேள்வி எழுப்பினார்.

சுட்டு பிடிக்கப்பட்டனர்

இந்த விசயத்திற்கு பதில் அளித்த முதல்வர், சேலத்தில் ஜான் என்பவர் உயர்நீதிமன்ற பிணையில் வெளியாகி, கையெழுத்திட சென்றார். அப்போது, மர்ம கும்பல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். ஜானின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவ்வழக்கில் தொடர்புடைய சரவணன், சதிஷ், பூபாலன், மைனா கார்த்திக் ஆகியோர், சித்தோடு காவல் துறையினரால் தப்பி செல்ல முயன்றபோது சுட்டு பிடிக்கப்பட்டனர். 

இதையும் படிங்க: நாய் கடித்து உயிரிழந்த மாடு, ஆடு, கோழிகளுக்கு இழப்பீடு.. சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு.!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஜானை கொலை விஷயத்துக்கு பழிவாங்க பதில் கொலை நடைபெற்றுள்ளது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. காவல்துறை தீவிரமாக செயல்பட்டு, குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்கிறது. குற்றச்சம்பவத்துக்கு பின்னர் துரித நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அதிகாரிகள் தீவிர பணியாற்றி வருகின்றனர். 

நினைவிருக்கா?

கூலிப்படை செயல்பாடுகள் கவனிக்கப்படுகின்றன. தேவை ஏற்பட்டால் குற்றவழக்கில் பட்டியலில் இருப்போர் குண்டரில் கைது செய்யப்படுகின்றனர். அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம், தூத்துக்குடி துப்பாக்கிசூடு போன்றவை நடத்தப்பட்டது நினைவில் இருக்கிறதா?" என முதல்வர் முக ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இதனால் ஆவேசமான அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க: #Breaking: கலைஞர் வீடு Vs பசுமை வீடு Vs மோடி வீடு.. சட்டபேரவையில் காரசார விவாதம்.!