திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாஜகவின் லிஸ்டில் அடுத்தது யார்?; கொளுத்திப்போடும் எச்.ராஜா., பதற்றத்தில் தமிழக அரசியல்களம்..!
கடந்த சில வாரங்களுக்கு முன் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்க துறை சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்றது.
அடுத்தடுத்த அமலாக்கத்துறை சோதனையால், அடுத்தது என்ன? என்பது தெரியாமல் அரசியல் வட்டாரங்கள் பதற்றத்தில் இருக்கும் நிலையில், பாஜக மூத்த தலைவர் ராஜா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்திக்கையில், "தமிழகத்தை தூய்மைப்படுத்த தமிழ்நாடு மக்கள் அனைவரும் பிரதமர் மோடியின் பின்னால் வரவேண்டும். தமிழகம் தலை நிமிர்ந்துவர திமுக மற்றும் திக போன்ற கட்சிகள் நீக்கப்பட வேண்டும்.
எங்களுக்கு எதிராக எடுக்கப்படும் கைது நடவடிக்கைகளை பார்த்து பாஜக என்றும் பயப்படாது. நாங்கள் பட்டியலிட்டு தூக்க வேண்டியவை கட்டாயம் தூக்குவோம்" என்று தெரிவித்தார்.