மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வைரல் வீடியோ: குடைபிடித்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ காட்சி..
பேருந்துக்குள் மழைநீர் கொட்டியதால் அரசு பேருந்து ஓட்டுநர் குடைபிடித்தவாறு பேருந்தை ஓட்டிச்செல்லும் வீடியோ காட்சி தற்போது வைரலாகிவருகிறது.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பருவமழை பெய்துவருகிறார். காலையில் தொடங்கி மாலை வரை மழை விட்டு விட்டு பெய்துவருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை அருகேயுள்ள கப்பிகுளத்திற்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டுவருகிறது.
வழக்கம்போல் அந்த பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கப்பிகுளம் சென்றபோது மழை அதிகமாக பெய்ததால் மழை நீர் பேருந்தின் மேற்கூரையில் இருந்த ஓட்டை மூலம் பேருந்தின் உள்ளே கொட்டியுள்ளது. இதனால் பேருந்திற்குள் அமர்ந்திருந்த சில பயணிகள் பேருந்துக்கு உள்ளே குடை பிடித்தவாறு பயணித்துள்ளனர்.
இதில் மேலும் கொடுமையான சம்பவம் என்வென்றால், பேருந்தை இயக்கிய ஓட்டுனரின் மீதும் மழை நீர் கொட்டியதால் அவரும் வேறு வழியில்லாமல் குடை பிடித்தபடியே பேருந்தை இயக்கியுள்ளார். அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் குடைபிடித்தபடி பேருந்தை இயக்கிய அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
நன்றி: tamil.news18.com