மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இராஜபாளையம் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி செயல்: முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..!
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள் விழா இன்று அவரது கட்சியினரால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகள் பலரும் மக்களுக்கு இனிப்பு வழங்குதல், அன்னதானம் என பல நலத்திட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பல மாநில மற்றும் தேசிய அளவிலான அரசியல்கட்சி தலைவர்களும் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் நகரில், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, இராஜை அரசு மகப்பேறு மருத்துவமனையில் மார்ச் 01ம் தேதியான இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
இராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.தங்கபாண்டியன், இன்று பிறந்த 3 குழந்தைகளுக்கும் தனது கரங்களால் தங்க மோதிரம் அணிவித்ததோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்குமாறும் குழந்தையின் பெற்றோரிடம் கோரிக்கை வைத்துக்கொண்டார்.
மேலும், அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்த பலருக்கும் நேரடியாக பிரட் மற்றும் பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி, உடல்நலம் தேற ஆறுதல் கூறினார்.
அதனைத்தொடர்ந்து, சேத்தூர் பேரூராட்சி சனத்தைக்கடை மூக்கு பகுதியில் திமுக கொடியேற்றி, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நகர சேர்மன் பவித்ரா ஷியா, நகர செயலாளர்கள், கழக செயலாளர்கள், துணை சேர்மன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர், இளைஞரணி அமைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.