பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் நம்ம முதல்வர் செய்த காரியம்.. வைரலாகும் புகைப்படம்..



TN CM Edapadi palanisami with aiadmk volunteer baby

பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொண்டர் ஒருவரின் குழந்தையை தூக்கி கொஞ்சிய புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும்நிலையில் திமுக, அதிமுக போன்ற காட்சிகள் தற்போதில் இருந்தே தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. மேலும் கலைஞர் இல்லாமல் திமுகவும், ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவும் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதால் வரும் தேர்தல் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது அதிமுக கட்சி சார்பாக  மாவட்டம் மாவட்டமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், எடப்பாடியார் அவர்கள் நேற்று ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்  பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது தன்னை காண்பதற்காக வந்திருந்த அதிமுக தொண்டர் ஒருவரின் குழந்தையை முதல்வர் தூக்கி கொஞ்சிய காட்சிகள் புகைப்படமாக வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.

Tn Cm