காலை உணவு திட்டத்தை விமர்சித்தவர்களுக்கு தரமான பதிலடி; குழந்தைகளின் ஓவியத்தை பகிர்ந்து பாய்ந்த மு.க ஸ்டாலின்..!



tn-cm-mk-stalin-congrats-children-who-drawing-about-mor

 

தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கு வரும் குழந்தைகள் இரண்டு வேளையிலும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, பயிற்றுவித்தலை ஊக்குவிக்கும் பொருட்டு சமீபத்தில் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார். 

இந்நிலையில், தமிழகத்தில் தின நாளிதழாக வெளியாகும் தனியார் பத்திரிகையொன்றில், மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை என குறிப்பிட்டு, சர்ச்சைக்குரிய தலைப்பை முதல் பக்கத்திலேயே வைத்து மாநிலமெங்கும் விநியோகம் செய்தது. 

இதனால் அப்பத்திரிகைக்கு எதிராக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வரைந்த, முதல்வர் மு.க ஸ்டாலின் சிறுமிக்கு உணவு ஊட்டுவதுபோல இருந்த வரைபடம் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், "குழந்தைகளின் அன்பு அத்தனை பொய்ப்பரப்புரைகளை தோற்க்கசெய்துவிட்டது. இவர்களின் ஓவியத்திறன் மேலும் சிறக்க நான் வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.