தமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது!! அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..



TN CM Stalin actions against corona

தமிழகத்தில் இனி கொரோனாவால் ஒரு உயிரிழப்புகூட ஏற்பட்ட கூடாத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றபிறகு அவரது தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் இன்று (மே 10 2021) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டநிலையில், இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

1. தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும்.

2. அரசு, தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கப்படும்.

3. மருத்துவ ஆக்சிஜன் முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

4. எக்காரணம் கொண்டும் மருத்துவ ஆக்சிஜன் வீணாக அனுமதிக்கக் கூடாது.

5. ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

6. அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டிசிவிர் மருந்து தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனாவால் இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.