மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் சைக்கிள்ல வந்தாரு!! ஆனால்!! நம்ம முதல்வர் ஓட்டுப்போட்டு எப்படி வந்தார் தெரியுமா??
விறுவிறுப்பாக நடந்துவரும் தேர்தலில் அனைத்துத்தரப்பு மக்களும் ஆர்வமுடன் தங்கள் வாக்கினை பதிவு செய்துவருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று (06-04-2021) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்கள் வாக்கினை பதிவு செய்துவருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் வாக்கு சாவடிக்கு சென்று தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிவருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிள் புறப்பட்டு சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல் நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் என பலரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
#ThalapathyVijay arrives in cycle to cast his vote in #TamilNaduElections 👍#Thalapathy #Vijay @actorvijay pic.twitter.com/Y0MfcbNUSn
— Suresh Kondi (@V6_Suresh) April 6, 2021
இந்நிலையில் தற்போதைய தமிழக முதல்வர் திரு. பழனிச்சாமி அவர்கள், சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கினை பதிவு செய்தார்.
வாக்கு சாவடிக்கு செல்வதற்கு முன்னதாக தனது வீட்டில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மற்றும் சமீபத்தில் மறைந்த தனது அம்மாவின் படங்களுக்கு முதலில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர், பின் தனது குடும்பத்தினருடன் சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிக்கு நடந்து சென்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்.
தலைவா ❤️❤️❤️ #AIADMKFOR2021 #EPSFORCM pic.twitter.com/e8Jj9jhbd6
— அஇஅதிமுக (@ADMKofficial) April 6, 2021