மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளி ஸ்பெஷல்.! குடிமகன்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.!
இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாப்படவிருக்கின்ற நிலையில்,குடிமகன்களுக்கு தமிழக அரசு குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தியை சொல்லியுள்ளது.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, சில புதுவகை பீர்கள் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிகிறது. அந்த புதிய வகை பீர்கள் நவம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் பீர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அண்டை மாநிலங்களில் இருந்து பீர்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஆகவே, மத்திய பிரதேசத்தில் செயல்பட்டு வரும் எஸ்.ஓ.எம் என்ற பீர் தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழகத்தில், கும்மிடிப்பூண்டி பகுதியில் மது ஆலையை தொடங்குவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளதாக தெரிகிறது.
அதோடு, டிசம்பர் மாதத்திற்கு பிறகு, பல்வேறு வெளி மாநில நிறுவனங்களின் மூலமாக, தயாரிக்கப்பட்ட பீர்களும் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருக்கும் நிறுவனங்கள் மூலமாக தயாரிக்கப்படும் பீர்களை விற்பனை செய்வதற்கு, குளிர்சாதன பெட்டியை ஏற்பாடு செய்வதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
தமிழக டாஸ்மாக் கடைகளில் சூப்பர் ஸ்டிராங், கிங்பிஷர், கிங்பிஷர் ஸ்டிராங், கோல்டு பிரீமியம் லேகர் பீர், கிளாசிக் பீர், எஸ்.என்.ஜே , மேக்னம் ஸ்டிராங் மற்றும் டீசலக்ஸ் உள்ளிட்ட 35 வகைகள் மேற்பட்ட பீர்கள் விற்பனைக்கு இருக்கின்றன. அன்றாடம் 50 லட்சம் வீடுகள் விற்கப்பட்டு வரும் நிலையில் கோடை காலத்தில் 65 லட்சம் பெட்டிகள் விற்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.