திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மக்களே கவனம்.. ஜனவரி 13,14-ஆம் தேதி இரவுகளில் கட்டுப்பாடு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு அறிவிப்பு..!!
போகி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஜனவரி 14-ஆம் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்படுவதை தொடர்ந்து, ஜனவரி 13, 14-ஆம் தேதி இரவுகளில் பழைய பொருட்களை எரிக்ககூடாது என்று முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
டியூப், டயர், பழைய துணி மற்றும் நெகிழி உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்கள் இருப்பின் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் இப்பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.