#Breaking: அவையில் இருந்து வெளியேறியது ஏன்? - ஆளுநர் மாளிகை விளக்கம்..!



tn-governor-getting-out-from-tn-assembly-house

 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025 இன்று முதல் தொடங்கி நடைபெறும் என அறிவிப்பட்ட நிலையில், ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தார். ஆளுநர் சட்டப்பேரவைக்கு வந்ததும், அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். அதிமுகவினர் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார்? என விசாரணை நடத்த அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியினர் அண்ணா பல்கலை., விவகாரத்தில், ஆளுநரின் சார்பில் துணை வேந்தர் நியமனம் செய்யப்படாதது தான் காரணம் என குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு ஆளுநருக்கு எதிராக கோஷமிடப்பட்டது. இதனால் அங்கு அமளியான சூழல் உண்டாகிய நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி தனது உரையை நிகழ்த்தாமல் வெயியேறினார்.

இதையும் படிங்க: #Breaking: சட்டப்பேரவையில் கடும் அமளி.. அதிமுகவினர் வெளியேற்றம் - சபாநாயகர் உத்தரவு.!

இந்நிலையில், ஆளுநர் மாளிகையின் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், "தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் இந்திய அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இது அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் மாளிகைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் அவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என, கவர்னர் கடும் வேதனையுடன் சபையை விட்டு வெளியேறினார்" என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: #Breaking: "வந்த வேகத்தில் இருந்து புறப்பட்டார்" - சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்; அதிமுக, காங்கிரஸ், தவாக கோஷம்.!