தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. விரைவில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும்! அமைச்சர் செல்லூர் ராஜூ.



TN-Govt-issue-order-Movabvle-Ration-shops

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 501 ரேசன் கடைகள் நகரும் கடைகளாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.

சென்னையில் 400 நடமாடும் ரேஷன் கடைகள் வர வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த நடமாடும் ரேசன் கடையால் நகர மக்கள் மிகுந்த பயன் பெறுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

Movable ration shop

இந்நிலையில் நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு கட்டிடம், ஊராட்சி நிர்வாக கட்டிடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்பட உள்ளது. நடமாடும் ரேஷன் கடைகள் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா கடைகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.