திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போடு.. தகிட., தகிட., 4 நாட்கள் தொடர் விடுமுறை.. அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்.!
4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக வெளியூருக்கு பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற காரணத்தால், 1000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. கோடைகாலத்தின் தொடக்கம் மற்றும் பள்ளி, கல்லூரி இறுதி தேர்வுகளை முன்னிட்டு படிப்படியாக விடுமுறைகள் வருகிறது.
இதனால் பேருந்து மற்றும் இரயில்களில் தற்போதே பயணசீட்டுகள் முன்பதிவு செய்யப்பட தொடங்கிவிட்டன. 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, 15 ஆம் தேதி புனிதவெள்ளி மற்றும் அம்பேதகர் பிறந்தநாள், 16 மற்றும் 17 ஆம் தேதி சனி & ஞாயிறு விடுமுறை என 4 தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
16 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி என்பதால், பலரும் தங்களின் சொந்த ஊர் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்வது வழக்கம். இதனால் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக 1000 பேருந்துகள் இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. 13 ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.