தமிழகத்திலும் பரவுகிறது தக்காளி வைரஸ்? - உஷார்படுத்திய அதிகாரிகள்.. தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பரபரப்பு பேட்டி.!
கேரளா மாநிலத்தில் பரவியுள்ள தக்காளி காய்ச்சல் காரணமாக 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சல் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை குறிவைத்து தாக்கும் என்றும், இதனால் சருமத்தில் சிவந்த நிறத்திலான திட்டுகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்காளி காய்ச்சல் மேலும் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, கொல்லம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. மேலும், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேலம் நகரில் வைத்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தக்காளி காய்ச்சல் குறித்து நாம் அச்சப்பட தேவை இல்லை. அது சாதாரண வைரஸ். தக்காளிக்கும், வைரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தோல் சிவந்த நிறத்தில் மாறுவதால் இதற்கு அப்பெயர் வந்தது. தண்ணீரில் உறுபதியாகும் கொசுவால் இது பரவலாம். தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்பட வேண்டாம்" என்று தெரிவித்தார்.