மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: தமிழ்நாட்டில் 9 மாவட்டத்தில் இடி-மின்னலுடன் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் பல இடங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 7 மற்றும் 8 ம் தேதியில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்ப அலையால் 2 டிகிரி வெப்பம் உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
தெந்தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் மற்றும் உள்மாவட்டங்களில் நிலவும் வெப்பம் காரணமாக, தென்மாவட்டங்களில் கடலோரம் அலைகள் 1 அடி வரை உயர எழும்பும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாலை 6.30 மணிவரையில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழையும், கோவை, இராமந்தபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் இடி-மின்னலுடன் லேசான மழையும் பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.