மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: விடியவிடிய வெளுத்துவாங்கும் கனமழை: 10 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிப்பு..!
தமிழகத்தில் நேற்று (ஜன.7) முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று கடலூர், விழுப்புரம் உட்பட நான்கு மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பல மாவட்டங்களில் நேற்று காலை முதலாகவே திடீர் மழை பெய்து வந்தது.
நள்ளிரவு முதல் விடிய விடிய வட தமிழக மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளி-கல்லூரிகளுக்கு மழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் விடுப்பு அறிவித்து உத்தரவிட்டனர்.
அதேபோல அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.