வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
#Breaking: நாளை பள்ளிகள் திறப்பு உறுதி: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!
தமிழ்நாடு மாநில கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வு நிறைவுபெற்றதை தொடர்ந்து, 01 ஜனவரி 2025 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில், நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; தந்தை-மகன் பரிதாப பலி.!
நாளை பள்ளிகள் திறப்பு
தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரையாண்டு விடுமுறை நீடிப்பு செய்யப்படலாம் என தகவல் பரவுகிறது. இது உண்மைக்கு புறம்பானது.
02.01.2025 அன்று திட்டமிட்டபடி தமிழ்நாடு மாநில / மத்திய கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள், அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்படும். திறக்கப்படும் தேதியில் எந்த விதமான மாற்றமும் இல்லை என அறிவித்து இருக்கிறது.
இதையும் படிங்க: மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய மகனை சவக்கோலத்தில் பார்த்த பெற்றோர்.. போதை ஆசாமிகளால் சோகம்.!