திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: 06 முதல் 10ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு தேதி, விடுமுறை அறிவிப்பு: விபரம் இதோ.!
தமிழ்நாடு மாநில கல்வித்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வுகள் அடுத்தபடியாக நடைபெறவுள்ளன. இதற்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
அதன்படி, 11ம், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 08 முதல் தொடங்கி டிசம்பர் 22ம் தேதி வரை தேர்வுகளும், 06ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, டிசம்பர் மாதம் 11ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை தேர்வுகளும் நடைபெறும்.
இதனையடுத்து, ஒட்டுமொத்தமாக விடுமுறை விடப்பட்டு, பின் ஜனவரி மாதம் 02ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன என எதிர்பார்க்கப்படுகிறது.
06ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 11ம் தேதி தமிழ், 12ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 13ம் தேதி ஆங்கிலம், 15ம் தேதி அறிவியல், 18ம் தேதி கணிதம், 20ம் தேதி சமூக அறிவியல், 21ம் தேதி உடற்கல்வி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் நிறைவுபெற்று பின் பள்ளிகள் மீண்டும் ஜனவரி 02, 2024 அன்று திறக்கப்படும்.
Thanks: Kalvi Seithi Official