ஆறாம் வகுப்பு முதல் இன்று பள்ளிகள் திறப்பு: உற்சாகமாக பள்ளிக்கு கிளம்பும் மாணவர்கள்.!



TN School Re Open Today after Quarterly Exam

 

தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்து வரும் அனைத்து மாணவ-மாணவிகள் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறையானது பலகட்டமாக விடப்பட்டன. 

கடந்த 23 ஆம் தேதி முதல் ஒரு சில பள்ளிகளுக்கும், 27ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டன. அதனைத்தொடர்ந்து, மிலாடி நபி, காந்தி ஜெயந்தி போன்ற தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களுக்கு கூடுதலாகவே விடுமுறை கிடைத்தன. 

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐந்து நாட்கள் வரை விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறையானது நேற்றுடன் நினைவு பெற்ற நிலையில், இன்று அனைத்து அரசு, மாநகராட்சி, நகராட்சி, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 

அதேபோல, தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எட்டாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறையை தொடர்ந்து பள்ளிக்கு காலையிலேயே விரைந்து புறப்பட்ட மாணவர்கள், தங்களின் வகுப்பறையில் சென்று நண்பர்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.