தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
குரூப்-4 தேர்வு எழுதியவரா நீங்க..!! அடிச்சிது லக்!! டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட குட் நீயூஸ பாருங்க..!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட குரூப்-4 பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம்தேதி நடைபெற்றது.
தேர்வுக்கான அறிவிப்பு வெளியான நேரத்தில் 7 ஆயிரத்து 301 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே குரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. மேலும் ஏற்கன்வே இருந்ததை காட்டிலும் கூடுதல் காலி பணியிடங்களை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நேற்று டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அறிவிப்பில், கூடுதலாக 2 ஆயிரத்து 816 காலி இடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரத்து 117 பதவிகள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.