"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
வாவ்.. சூப்பர்.! டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் தேர்வாணையம் ஆகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த தேர்வாணையத்திற்கு சமீபத்தில் நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்திருந்தது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வினாத்தாள், விடை வினாத்தாள் அறிவிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும் ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.