திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலியின் தாயிடம் இருந்து தப்பிக்க... மொட்டை மாடியில் இருந்து குதித்த இளைஞன்.... உயிரிழந்த பகீர் சம்பவம்...!
காதலியிடம் பேசுவதை காதலியின் தாய் பார்த்ததில் பயந்து மாடியில் இருந்து குதித்த மாணவர் உயிரிழந்த பரிதாபம்.
சேலம் கொல்லப்பட்டியில் மதிய சட்டக் கல்லூரி உள்ளது. தருமபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் இந்த கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கொல்லம்பட்டியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
சஞ்சய் யின் தாய் தந்தையர் இந்தியன் வங்கியில் மேனேஜராக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள் ஹரிணி தனது தாய் மற்றும் தங்கையுடன் கொல்லப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அதே கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கரூரில் பள்ளியில் பயின்ற போது மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனிடைய நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் ஹரிணி தங்கி இருந்த வீட்டுக்குச் சென்ற சஞ்சய் ஹரிணியுடன் மொட்டை மாடியில் தனிமையில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது தன்னுடைய மகள் வீட்டில் இல்லாததால் அவரை தேடி மொட்டை மாடிக்கு வந்த ஹரினியின் தாய் சுகந்தி வந்தபோது இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார்.
அப்போது அங்கிருந்து தப்பிப்பதற்க்காக சஞ்சய் சுமார் 50 அடி உயரத்தில் இருந்த மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சஞ்சய் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர் விரைந்து வந்து அவர்கள் சஞ்சையின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். சஞ்சயின் உடலல பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காதலியின் தாய்க்கு பயந்து காதலன் மொட்டை மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.