மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்று முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்! எதுபற்றிய ஆலோசனை நடக்கவுள்ளது?
இன்று ஜூலை 14 ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தகவல் கூறுகின்றன. கொரோனவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
தமிழக்தில் கொரோனா தொற்று பரவல் சவாலாக இருக்கும் நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர், மதுரை, சேலம், திருநெல்வேலி, திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று துவங்குகிறது.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு பணி குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது.