மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென குறைந்த தங்கத்தின் விலை! நகை கடைகளை நோக்கி ஓடும் பொதுமக்கள்!
இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. மேலும் இதனால் தங்கம் வாங்கும் ஆசையே மக்களுக்கு விட்டுப்போய் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களில் மட்டுமே 2000 ரூபாய்க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து கிராமுக்கு 3,594 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 28,752 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் தூய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 168 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் 80 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 3,774 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 30,192 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் ஏற்படாமல் நேற்றைய விலையான ஒரு கிராம் வெள்ளி விலை இன்று 48.20 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 48,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை சீட்டு போற்றுபவர்கள் இன்று நகை கடையை நோக்கி செல்கின்றனர்.