#BigNews: அரபு மொழி பயிலகம் பெயரில் ISIS பயங்கரவாதிகள் ஆள்சேர்ப்பு முகாம்; தமிழகத்தை அதிரவைத்த என்ஐஏ சோதனை.. அதிரடி விளக்கம் இதோ.!



Today NIA Conducted Search on Tamilnadu and Telangana Around 31 Places  

 

சென்னை, கோவை, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ஆகிய இடங்களில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இன்று காலை முதலாகவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

கோவையில் 10 க்கும் மேற்பட்ட இடங்கள், சென்னையில் 3 இடங்கள், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஒரு இடம் என தமிழகத்தில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

மாலை 3 மணியளவில் சோதனைகள் நிறைவுபெற்ற நிலையில், என்ஐஏ சோதனை தொடர்பான விளக்கத்தினை அளித்துள்ளது. அதன்படி, ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு நடந்தது அம்பலமானது. 

அதாவது, பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கவும், அதற்கு ஆட்கள் சேர்க்கவும் முயற்சி நடந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்க அரபு மொழி பயிலகம் என வகுப்புகள் எடுத்து ஐஎஸ் ஐஎஸ் பிரச்சாரம் நடத்தப்பட்டு ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த சோதனையில் பயங்கரவாதிகளிடம் இருந்து பல்வேறு கோப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அரபு மொழி குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது. அவை ஆய்வுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரூ.60 இலட்சம் அளவிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து அரபு மொழி பயிலகம் தொடர்பான தகவல் அம்பலமாகி அதிரடி சோதனை நடைபெற்றுள்ளது.