தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மகிழ்ச்சியான செய்தி...தங்கம் விலை மேலும் சரிவு..இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
கொரோனா பரவல் அதிகரித்ததில் இருந்தே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. அதற்க்கு காரணம் உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். கொரோனா சமயத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது.
இருப்பினும் அவ்வப்போது சற்று ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலையானது இருந்துவந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,136-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராம் 65.90ல் இருந்து 65.40 ஆக குறைந்து உள்ளது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் 4,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கத்தின் விலை ரூ.13 குறைந்து ரூ.4,517-க்கு விற்கப்படுகிறது.பவுன் 36,240-ல் இருந்து ரூ.36,136 ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.104 விலை குறைந்து இருக்கிறது. மேலும் ஒரு கிலோ 65,900 ரூபாயில் இருந்து 65,400 ரூபாயாக குறைந்து உள்ளது.