மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த தங்கம் விலை... மகிழ்ச்சியில் மக்கள்!!
சமீப காலமாக பங்குசந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வருவதால் பல முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்ததை அடுத்து இன்று திடீரென தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 சரிந்து, ரூ.4,740க்கும்,சவரனுக்கு ரூ,760 குறைந்து, ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 குறைந்து, சில்லறை வர்த்தகத்தில் ரூ.66க்கு விற்பனை செய்யப்படுகிறது.