#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன தெரியுமா.?
சென்னையில் 55 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையே நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால், உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் வருத்தத்தில் இருந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரிக்கை விடுத்தனர்.
அதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில் 55 வயது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.