இந்த 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? முழு விவரம்.



Todays rain update for chennai and tamilnadu

கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் திருமானூரில் 11சென்டி மீ ட்டர் மழை பதிவாகியுள்ளது. தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் 9 சென்டி மீட்டர், திருவையாறு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வானிலை அறிக்கையில் மேற்கு மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Rain in chennai

குறிப்பாக வட மாநிலங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.