தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு.! வாகன ஓட்டிகள் பேரதிர்ச்சி.!
தமிழ்நாட்டில் மொத்தமாக 50 சுங்க சாவடிகள் நெடுஞ்சாலைகளில் உள்ளன. இதில் ஆண்டுக்கு இரண்டு முறை கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். ஏப்பல் 1ம் தேதியும் செப்டம்பர் 1ம் தேதியும் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரலில் ஏற்கெனவே 22 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீதமுள்ள 28 சுங்க சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த 28 சுங்க சாவடிகளில், செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையும் உயர்த்தப்பட உள்ளது. திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வு அறிவிப்புக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.