மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தக்காளிக்கு பதில் தக்காளி பேஸ்ட்..! வெறும் 10 ரூபாய் தானாம்.!
தக்காளியின் விலை கேட்டாலே தலைதெறித்து ஓடும் அளவிற்கு அதன் விலை உயர்த்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே மக்கள் தக்காளி விலை உயர்வால் அவதிப்பட்டு வருகின்றன. ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய்க்கும் மேல் விற்பனை ஆனது. இதனால் தக்காளிக்கு பதில் புளியை பயன்படுத்தும் நிலை வந்துள்ளது.
திடீர் விலையேற்றத்தால் அதிர்ந்து போன மக்கள், தக்காளி இன்றி தான் சமைத்து வருகிறார்களாம். ஆந்திர போன்ற வெளி மாநிலத்தில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால், இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்கள் தக்காளி பேஸ்ட் நோக்கி படையெடுத்துள்ளார். அதில் 7 முதல் 8 தக்காளி சமைக்கப்படும் இடத்தில் இந்த பேஸ்டை பயன்படுத்தினால் போதுமாம். அதுவும் வெறும் பத்து ரூபாயில் கிடைக்குதாம்.