#Breaking: மீண்டும் அதிகரித்தது தக்காளியின் விலை.. சென்னையில் கிலோ ரூ.150-க்கு விற்பனை.!
தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே உச்சத்திற்கு சென்றுள்ள தக்காளி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து, மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ரூ.130 க்கு விற்பனை செய்ப்படுகிறது. சில்லறை விற்பனைக்கடைகளில் தக்காளி ரூ.150 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி உட்பட அத்தியாவசிய காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருப்பது பல நடுத்தர வர்த்தகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல, நேற்று கோயம்பேடு சந்தைக்கு 500 டன் தக்காளி வரத்து இருந்த நிலையில், இன்று 400 டன் மட்டுமே வரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விலை மேலும் அதிகரித்துள்ளது.