திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரே நாளில் குறைந்த தக்காளி விலை.? இன்றைய விலை விவரம் இதுதான்..!
தக்காளியின் விலை கேட்டாலே தலைதெறித்து ஓடும் அளவிற்கு அதன் விலை உயர்த்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே மக்கள் தக்காளி விலை உயர்வால் அவதிப்பட்டு வருகின்றன. ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய்க்கும் மேல் விற்பனை ஆனது. இதனால் தக்காளிக்கு பதில் புளியை பயன்படுத்தும் நிலை வந்துள்ளது.
திடீர் விலையேற்றத்தால் அதிர்ந்து போன மக்கள், தக்காளி இன்றி தான் சமைத்து வருகிறார்களாம். ஆந்திர போன்ற வெளி மாநிலத்தில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால், இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு மார்கெட்டிற்கு 130 லாரிகளில் தக்காளி இன்று காலை காலை பொழுதில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நேற்று கிலோ 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை ஒரே நாளில் 35 ரூபாயாக குறைந்துள்ளது.
இதன் அடிப்படியில், கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் தக்காளி கிலோ 80 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்தநிலை நீடித்தால் தக்காளி விலையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.