மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிரடியாக குறைந்த தக்காளியின் விலை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
கடந்த சில மாதங்களாகவே தக்காளியின் வரத்து குறைந்து விலையேற்றமானது அதிகரித்தது. இதனால் தக்காளி கிலோ 200 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், சில காய்கறிகளின் விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் சமைப்பதற்கே திண்டாடும் நிலை வந்தது.
சில மாதங்களாகவே தக்காளியை நினைத்தாலே விழி பிதுங்கும் அளவிற்கு அதன் விலை ஏற்றமானது இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை வரத்து அதிகரிப்பு, காரணமாக தக்காளி விலையும் சரியத் தொடங்கியுள்ளது.
இதனால் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை குறைவால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.