#Breaking: தங்கத்தை போல கிடுகிடுவென உயர்ந்த தக்காளியின் விலை..! அதிர்ச்சியில் மக்கள்..!!
கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் பெய்து வந்த தொடர்கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தக்காளியின் வரத்தானது தமிழகத்தில் குறைந்து கடுமையான விலை உயர்வு இருந்தது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.100 முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கடந்த மூன்று நாட்களாக தக்காளியின் விலையானது கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று திடீரென தக்காளி விலை மீண்டும் ரூ.120-ஆக உயர்ந்துள்ளது.
இந்த எதிர்பாராத உயர்வுக்கு காரணம் என்ன? என்பதை குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், மீண்டும் வரத்து குறைவானதால் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.