மாண்டஸ் புயல்: தமிழகத்தில் நாளை இந்த 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் அறிவிப்பு...



Tomorrow 8 district school and colleges leave announced

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சற்று முன்பு தீவிரமடைந்துள்ளது அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பரவலாக பெய்து வருகின்றது.மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு 11.30 முதல் நாளை அதிகாலை 2.30 மணி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்தது. இந்நிலையில் இன்று நள்ளிரவில் புயலானது கரையை கடக்க இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

​​​​​leave

அதன் படி வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர்,கடலூர்,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.