மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விசாரணையின் போது திடீரென மின்கம்பத்தில் ஏறி ட்ராபிக் போலிசாரை பதறவைத்த இளைஞர்.. !!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ஜோதி ரமேஷ் என்பவர் அவரின் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு பஜார் அருகே சென்றுக்கொண்டிருந்தார்.
அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள், ரமேஷின் வண்டியை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர்.
போலீசாரின் வேண்டுகோளுக்கு முறையாக ரமேஷ் பதில் சொல்லாததால், அவரின் பைக் சாவியை எடுத்து, அவரிடம் அபராதம் கட்டும்படி கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த ரமேஷ் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது பைக் சாவியை தரும்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திடீரென அருகே இருந்த மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர்.
நீண்ட நேரமாக கூறியும் ரமேஷ் கீழே இறங்காததால் போலீசார், மின்சார அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு, அப்பகுதியில் மின்சாரத்தை அணைத்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் ரமேஷை கீழே இறங்கி வரவைத்து விசாரணை மேற்கொண்டனர். ரமேஷ் திடீரென அவ்வாறு செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.