மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பணியில் இருந்தபோதே, மாரடைப்பால் உயிரிழந்த போக்குவரத்து காவலர்! வெளியான சோக சம்பவம்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் மருத்துவர்கள், காவலர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இரவு பகல் பாராமல் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தவர் அருண் காந்தி. நீடாமங்கலத்தை சேர்ந்த இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அருண்காந்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அருண்காந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பணியில் இருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு, காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.