ஹெல்மட் அணியாதவர்களுக்கு வித்யாசமான தணடனை கொடுத்த டிராபிக் போலீஸ்! பாராட்டித்தள்ளும் பொதுமக்கள்!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கவும் தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை மூலக்கடை மேம்பாலத்திற்கு கீழே, நேற்று காலை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையை சேர்ந்த செவிலியர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க தயார் நிலையில் இருந்தனர். ஆனால், வேலைக்கு செல்லும் பரபரப்பான சூழ்நிலையில் யாரும் நிலவேம்பு கசாயம் குடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
அதனை பார்த்துக்கொண்டிருந்த மாதவரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தபோது பொதுமக்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார். இந்தநிலையில் அவருடன் பணியில் இருந்த துணை ஆய்வாளர்கள் உதவியுடன் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிவந்தவர்கள் போக்குவரத்து போலீசார் வழிமறிப்பதை பார்த்ததும், அபராதம் காட்டியே ஆகவேண்டும் என்ற பயத்தில் இருந்தனர். அவர்களை இன்ஸ்பெக்டர் ஏன் ஹெல்மட் போடவில்லை என கேட்டபடி அங்கே சென்று நிலவேம்பு கசாயம் குடியுங்கள் என கூறி வித்யாசமான முறையில் தண்டனையை வழங்கினார். அவரது சேலை பார்த்த பொதுமக்கள் அவரை பாராட்டி தீர்த்தனர்.