மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரும் துயரம்.. தனியார் பள்ளி பேருந்து மோதி 10ம் வகுப்பு மாணவன் பலி.. கதறி துடித்த பெற்றோர்..!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் வசித்து வருபவர்கள் பிலிப்ஸ் - பிரியா தம்பதியினர். இவர்களுக்கு ரோஷன், ராகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ரோஷன் குன்னூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை ரோஷன் டூவீலரில் பள்ளிக்கு சென்றுள்ளார். குன்னூர் பந்திமை பகுதி அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து ரோஷன் மீது அதி வேகமாக மோதியது. இந்த விபத்தில் ரோஷன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இதனையடுத்து இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ரோஷனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.