திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயற்சித்த பெண்ணிற்கு நேர்ந்த சோகம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!
ஒடிசா மாநிலம் பர்கீஸ் பகுதியில் வசித்து வருபவர்கள் கபில் பகிரா - காயத்ரி பகிரா தம்பதியினர். இவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உறவினர்கள் 27 பேருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்புவதற்காக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து திருப்பூர் வழியாக சென்னை செல்லும் ரயிலில் ஏறுவதற்காக நடைமேடையில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். பின்னர் ரயிலானது நடைமேடை எண் 2ல் வந்து நின்ற போது உறவினர்கள் அனைவரும் ரயிலில் ஏறத் தொடங்கினர்.
ஆனால் அவர்கள் ஏறுவதற்குள் ரயில் புறப்பட்டு விட்டதால் காயத்ரி பகிரா உறவினர்கள் உதவியுடன் முதலில் சிறுவனை ஏற்றிவிட்டு கைக்குழந்தையுடன் ஏற முயற்சித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கைக்குழந்தையுடன் கீழே விழுந்தார் காயத்ரி பகிரா. இதனையடுத்து அங்கிருந்த பயணிகள் கீழே விழுந்த கைக்குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்த காயத்ரி பகிராவை அங்கிருந்த பயணிகள் துரிதமாக மீட்டனர். இருப்பினும் அவருக்கு கை, இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயத்ரி பகிராவை அங்கிருந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி கீழே விழுந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.