மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான 2 நாட்களில் புதுப்பெண்ணிற்க்கு நேர்ந்த விபரீதம்..கதறும் குடும்பத்தினர்..!
இடைப்பாடி வெள்ளாண்டிவலசை சேர்ந்த செந்தில் கொங்கணாபுரம் அருகே தங்காயூரில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இடைப்பாடி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு மகள் சுதா என்பவருடன் செந்திலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து திருமணம் ஆன மறுநாள் சுதாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன மாப்பிள்ளை வீட்டார் சுதாவின் தாய்க்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சுதாவை அவரது கணவர் மற்றும் சுதாவின் தாய் இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் சுதா மருத்துவமனைக்கு போகும் வழியில் மூச்சுத்திணறல் அதிகமாகி மயங்கியுள்ளார். பின் மயக்க நிலையிலிருந்த சுதாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சுதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் சுதாவின் கணவரும் தாயும் அதிர்ச்சியடைந்து அழுது புலம்பினர்.
இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த இடப்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுதா ஏற்கனவே மூச்சு திணறல் பிரச்சனையால் அவதிபட்டு வந்ததும் கடந்த 4ஆண்டுகளாக அதற்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் திருமணமான இரண்டு நாட்களில் புதுப்பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.