மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவகாசியில் நடந்த சோகம்... குடும்பத் தகராறு.. கோபித்துக் கொண்டு சென்ற மனைவி... மனமுடைந்த கணவனின் விபரீத முடிவு..!
சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டியில் வசித்து வருபவர்கள் கணேசன் -உமய லட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி உமைய லட்சுமி உயிர் இழந்ததை அடுத்து அவரது சகோதரியான ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார் கணேசன்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி ராதிகா குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கணேசன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தனது 9 வயது மகளான அபிநயாவிற்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மேலும் இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.