#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருச்சியில் சோகம்... நீரில் மூழ்கி பலியான 2 சிறுவர்கள்.! உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை.!
திருச்சியில் பள்ளி சென்ற இரண்டு மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
திருச்சியில் கேகே நகர் சாத்தனூர் ரிங் ரோடு முதல் புதுக்கோட்டை சாலை வரை பெரிய குளம் அமைந்துள்ளது. திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில் உள்ள மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரஹீம் இவரது மகன் கமருதீன்(11). அதே பகுதியைச் சேர்ந்த பீர்முகமது என்பவரது மகன் முஹம்மது ஆதில்(6). இந்த இரண்டு சிறுவர்களும் நேற்று மாலை பள்ளி விட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவர்களை பல இடங்களில் தேடியிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர் அப்போது பெரிய குளத்தின் கரையில் மாணவர்களின் சைக்கிள் மற்றும் உடைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் குளத்தில் இறங்கி மாணவர்களை தேடினர்.
நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு இரண்டு மாணவர்களும் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் இரண்டு மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.