மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பாவம் வாயில்லா ஜீவன்..." விஷம் கலந்த உணவை உண்டு பரிதாபமாக இறந்த 20 நாய்கள்.!பரிதாப சம்பவம்.!
சென்னை பல்லடம் அருகே 20க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சியில் விஷம் கலந்த உணவை உட்கொண்ட 20 இருக்கும் மேற்பட்ட நாய்கள் இறந்துள்ளதாக பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கின்றனர். மேலும் விஷம் கலந்த உணவை உண்டு தெரு நாய்களுடன் சேர்ந்து வளர்ப்பு நாய்களும் இருந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. நாய்களுக்கு விஷம் கலந்த உணவை வைத்தது யார் என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். நாய்களின் தொல்லை அதிகமானதால் யாரும் நாயை கொள்வதற்கு விஷம் வைத்திருக்கிறார்களா என்ற ரீதியிலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல்துறை ஆய்வு செய்துள்ளது. நாய்களை கொல்வதற்கு தடை உள்ள நிலையில் மர்ம நபர்கள் இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.