மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுரை ரயில்நிலையத்தில் திடீர் தீ விபத்து! 6 பேர் உயிரிழப்பு!!
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லக்னோ- ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் திடீரென்று தீ பற்றிக் கொண்டது. முதலில் இந்த தீயில் சிக்கி இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
பலியான இரண்டு பேரும் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலாக்காக வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் விவரங்கள் கண்டறியப்படவில்லை.
இந்த விபத்தானது நள்ளிரவில் நேரத்தில் ஏற்பட்டதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெட்டி எரிந்துள்ளது. இது குறித்த முதற்கட்ட விசாரணையில் சிலிண்டர் வெடித்து தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. அல்லது தீ விபத்து ஏற்பட்ட பின் சிலிண்டர் வெடித்து தீ வேகமாக பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ரயிலின் ஏற்பட்ட விபத்துக்கான காரணம் முழு விசாரணைக்கு பிறகு தான் கூறப்படும். இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.