தமிழகத்தில் தொடங்கியது ரயில் சேவை! மகிழ்ச்சியில் ரயில் பயணிகள்!



train service started

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் ஐந்து கட்டங்களாக நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தற்போது வரும் ஜூன் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சமயத்தில் சில தளர்வுகள் நீடிக்கப்பட்டநிலையில், தற்போது ரயில் சேவை தொடக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் முதல் ரயில் காலை 6.10 மணிக்கு கோவையில் இருந்து காட்பாடி நோக்கி புறப்பட்டது. அதேபோல், கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில் இடையேயான தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு கடந்த 30 ஆம் தேதி மாலை 4 தொடங்கப்பட்டது.

train

இந்நிலையில் ரயில்களில் பயணம் செய்பவர்கள் இ - பாஸ் பெறுவது அவசியம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி ரயிலில் செல்வோர் இ பாஸ் பெற https://tnepass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.