மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் திருநங்கை போட்டி.! செம மாஸ் தான்... அவர் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து வருகிறார்.
இந்தநிலையில் சென்னை மாநகராட்சி திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட 76வது வார்டு வேட்பாளராக திருநங்கை ராஜம்மாள் என்கிற ரதி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பா.ஜனதா கட்சியில் வடசென்னை மாவட்ட கலை கலாச்சார பிரிவு துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து ரதி கூறுகையில், தன்னை வேட்பாளராக அறிவித்த கட்சிக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். இந்த பகுதியில் அடித்தட்டு மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வேன். கடுமையாக உழைத்து நான் வெற்றி பெற்று மத்திய, மாநில அரசு வழங்கும் திட்டங்கள், எங்கள் பகுதி மக்களுக்கு முறையாக சென்று சேர துணை நிற்பேன் என தெரிவித்துள்ளார்.