மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாம் போச்சே.. காதல் கணவனுக்காக திருநங்கை மனைவி எடுத்த விபரீத முடிவு.! ஏன்? என்ன நடந்தது??
சேலத்தில் வசித்து வருபவர் 28 வயது நிறைந்த திருநங்கை ஸ்ரேயா. இவர் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 25 வயது நிறைந்த ராம்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். ஸ்ரேயா ராமிற்காக நிறைய பணம் செலவழித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே பண விஷயத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் ராம் ஸ்ரேயாவை விட்டுவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரேயா ராம்குமாரிடம் அவருக்கு கொடுத்த பணத்தை குறித்து கேட்டுள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ராம்குமார் ஸ்ரேயாவை தாக்கியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமடைந்த ஸ்ரேயா தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த நிலையில் அவருடன் இருந்த திருநங்கைகள் ஸ்ரேயாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீஸ் விசாரணையின் போது அவர்கள் கூறியதாவது, ராம் ஏற்கனவே குண்டாஸில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று வந்துள்ளார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஸ்ரேயாதான் செய்தார். அவருக்கு நிறைய பணம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ராமிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ராம் ஸ்ரேயாவை விட்டு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்து ஸ்ரேயா தற்கொலை முயற்சி செய்துள்ளார். ராம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கிடையே ராம்குமார் மது அருந்திவிட்டு வந்து திடீரென விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.