மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுவனிடம் அத்துமீறிய திருநங்கைகள்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சேலம் மாவட்டம் காக்காபாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதில் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் விளையாடுவதற்கு சென்றுள்ளார். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விளையாட சென்ற சிறுவன் மிகுந்த சோர்வுடன் வீட்டிற்கு வந்துள்ளான்.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில், 2 திருநங்கைகள் சிறுவனிடம் ஆசையாக பேசி பிரியாணி வாங்கி கொடுத்து, வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து இனிமேல் யார் கூப்பிட்டாலும் செல்லக்கூடாது என சிறுவனுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் விளையாட சென்ற சிறுவனை அதே திருநங்கைகள் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் திருநங்கைகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் போர்ட் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், திருநங்கைகள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தல 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.